சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
வில்லிவாக்கம் பாலியம்மன் கோவிலில் இன்று மாலை 7 மணிக்கு ஆண்டு தோறும் நடைபெறும் புகழ்பெற்ற தீமிதி திருவிழா பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, அலகு குத்தி, தீ மிதித்து தங்கள் நேர்திக்கடனை செலுத்தினர்.
"அம்மா தாயே" என்ற பக்தி கோஷங்கள் விண்ணை முட்டின. கோவில் வளாகம் முழுவதும் மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.