சென்னை மவுண்ட் ரோடு, பேகம் சாகிப் தெருவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வித்தியாசமான அலங்காரத்தில், இரண்டு காளைகள் பூட்டிய ரதத்தில் கம்பீரமாக அமர்ந்தபடி, கையில் சங்கு, சக்கரத்துடன் நான்கு கரங்களுடன் விநாயகர் அருள்பாலிக்கிறார். ரதத்தை ஓட்டுபவராக சிறுவன் வேடத்திலும், முன்புறம் அம்மன் சிலையும் வைக்கப்பட்டு கண்கவர் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மாலை, மாவிலை தோரணங்கள், வண்ண விளக்குகளால் பந்தல் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பேகம் சாகிப் தெருவில் வைக்கப்பட்டுள்ள இந்த விநாயகரை காண சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
