*🔴 LIVE • ஆன்மீக செய்திகள் | GOPI 12 NEWS*
*புரட்டாசி 1 - பெருமாள் மாதம் பிறந்தது: வெள்ளிக்கிழமையில் இரட்டிப்பு புண்ணியம்!*
சென்னை, செப்.18:
தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படும்
புரட்டாசி மாதம் இன்று (18.09.2026) வெள்ளிக்கிழமை பிறந்தது.
பராபவ வருடம் புரட்டாசி 1-ம் நாள் வெள்ளிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
*இன்றைய சிறப்பு:*
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி வழிபாடும், புரட்டாசி மாதம் என்பதால் பெருமாள் வழிபாடும் சேர்ந்து இரட்டிப்பு பலனை தரும் நாள். இன்று முதல் அக்டோபர் 17 வரை புரட்டாசி மாதம் நீடிக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவிடந்தை, திருநீர்மலை உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகம், துளசி அர்ச்சனை நடைபெறுகிறது.
பக்தர்கள் இன்று மாலை 4.45 முதல் 5.45 வரை வீட்டில் விளக்கேற்றி, துளசி சமர்ப்பித்து "ஓம் நமோ நாராயணாய, கோவிந்தா கோவிந்தா" என்று கூறி வழிபட செல்வ வளம் பெருகும்.
நாளை (19-ம் தேதி) முதல் புரட்டாசி சனிக்கிழமை விரதம் தொடங்குகிறது. பக்தர்கள் அசைவம் தவிர்த்து விரதம் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். a586
*னGOPI 12 NEWS
E.கோபி, செய்தியாளர், சென்னை.
