முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் நகரில் பிரம்மாண்ட விநாயகர் சிலை - கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!


 சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்டமான விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 10 அடி உயரத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த விநாயகரை தரிசிக்க தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

சிறப்பு பூஜைகள், அன்னதானம் என விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இதுவே மிகப்பெரிய விநாயகர் சிலை என பொதுமக்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆரணியில் அதிர்ச்சி: 500 கிலோ கெட்டுப்போன அசைவ உணவு பறிமுதல்

  ஆரணி:  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காஜிவாடை பகுதியில் இயங்கி வந்த அசைவ உணவு விற்பனை கடையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி, மீன் ஆகியவற்றை நகராட்சி அதிகாரிகள் இன்று 01.07.2026 அதிரடியாக பறிமுதல் செய்தனர். நடந்தது என்ன? நகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்னு பிரதாப் ஆகியோர் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது கடையில் ஆட்டுத்தலை, கால், மீன் உள்ளிட்டவற்றை குளிரூட்டும் பெட்டியில் முறையாக பராமரிக்காமல், அழுகிய நிலையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் விவரம்: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன அசைவ கறியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை: மழைக்காலத்தில் அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும். எனவே பொதுமக்கள் ஓட்டல், கடைகளில் இறைச்சி வாங்கும்போது அதன் தரத்தை நன்கு பரிசோதித்து வாங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தவெக கட்சி சார்பில் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைப்பு - பொதுமக்கள் நன்றி

  திருவண்ணாமலை மாவட்டத்தில் தவெக கட்சியினர் ஆரணியில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் குறித்து வெளியான செய்திக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரணியில் சேதமடைந்திருந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மின் விபத்து அச்சத்தில் இருந்து  ஊர் பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் விரைவாக நடைபெற உதவியாக இருந்த  தமிழக வெற்றிக் கழக கட்சியினர் திருவண்ணாமலை  வடக்கு மாவட்ட   ஆரணி தென்கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு JSV சுதன் M.Com அவர்கள்  மற்றும்  தென் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் திரு AS.தண்டபாணி press பையூர்  அவர்களும் மற்றும்  மின்வாரிய துறை அதிகாரி அவர்களுக்கும் பொது மக்கள் சார்பில் மிகவும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி மலை மேல்சிசமங்கலத்தில் தவெக கட்சியினர் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

  திருவண்ணாமலை:  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம், கேக் வெட்டி கொண்டாட்டம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்சிசமங்கலம் கிளை சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர்.தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கி, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர். தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் திரு.கே.வெங்கடேஷ் குமார் மற்றும் ஒன்றிய இணைச் செயலாளர் திரு.எம்.மதிமாறன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  இந் நிகழ்ச்சியில் தவெக கழக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் திரு எழில், ராஜசேகர், கேசவேல், ஏழுமலை, பிரகாஷ், தமிழ்வாணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு முன்னிலை வகித்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்று, இனிப்புகளை பெற்றுச் சென்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினரின் இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.