முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

சென்னை பாடி திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் இன்று பிரதோஷ வழிபாடு கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்


 

சென்னை பாடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்ததும், பாடல் பெற்ற தலமுமான அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயிலில் (திருவலிதாயம்) இன்று பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொண்டை நாட்டு திருத்தலங்களில் ஒன்றான இந்த ஆலயத்தில், பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4.30 மணி முதல் நந்தி பகவானுக்கும், மூலவர் திருவல்லீஸ்வரருக்கும் பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு வில்வ இலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாடி, அம்பத்தூர், முகப்பேர், ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.

*தல சிறப்பு:* வலியன் என்ற பறவை வழிபட்ட தலம் என்பதால் திருவலிதாயம் என்று பெயர் பெற்றது. இங்கு பிரதோஷ வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அதிமுக 55-ம் ஆண்டு தொடக்க விழா - பெரம்பூரில் மாபெரும் கறி விருந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

கந்தசஷ்டி விழா: குழந்தைகளின் பரதநாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது

மகாகவி பாரதியார் நகர் கருமாரியம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

இன்று சேவூர் திரு.S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் மலர் தூவி மரியாதை

திரு. எடப்பாடி பழனிசாமியிடம் தீபாவளி வாழ்த்து பெற்றார் 36-வது வட்ட கழக செயல்வீரர் அ.ஹரிஹரன்

வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்!