சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
வில்லிவாக்கம், அயனாவரம் பகுதி மக்களுக்கு குட் நியூஸ்!
வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
*நம்ம ஆதவ் நம்ம வில்லிவாக்கம்* சார்பில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
*எங்கே, எப்போது?*
வில்லிவாக்கம் மற்றும் அயனாவரம் பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட 3 திருக்கோயில்களில், தினமும் மதியம் 12 மணி முதல் தலா 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
1. *வில்லிவாக்கம் அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்*
2. *வில்லிவாக்கம் அருள்மிகு சௌமிய தாமோதர பெருமாள் திருக்கோயில்*
3. *அயனாவரம் ஸ்ரீ பரசுராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்*
தேவையுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
