சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியராக (RDO) திருமதி கு. சௌமியா இன்று தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
*அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து*
புதிய கோட்டாட்சியராக பொறுப்பேற்ற அவருக்கு வருவாய்த் துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மலர்க்கொத்துகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
*பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு*
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோட்டாட்சியர் கு. சௌமியா, ஆரணி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மற்றும் குறைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அரசுத் திட்டங்கள் பொதுமக்களை விரைவாகச் சென்றடைய அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், வருவாய்த் துறை சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதத்தைத் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என உறுதியளித்தார்.
தேதி : 10-11-2026, செவ்வாய்க்கிழமை
📍 இடம் : ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்
✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா | Gopi12.in
-
