சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
சென்னை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள் சாலைகளில் குவிந்து கிடந்தன.
இதனை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று அதிகாலையில் இருந்தே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சாலைகளில் கிடந்த பட்டாசு கழிவுகள், குப்பைகளை சேகரித்து வாகனங்களில் ஏற்றி அகற்றி வருகின்றனர். இதனால் வில்லிவாக்கம் பகுதி மீண்டும் சுத்தமாக மாறி வருகிறது.
தூய்மை பணியாளர்களின் இந்த சேவையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
*நம்ம ஊரு மீடியா - E.கோபி செய்தியாளர், சென்னை*
