முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆன்மிகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொளத்தூர் ரூ.20 நோட்டுகளால் ஆன பிரம்மாண்ட விநாயகர் - பக்தர்கள் வியப்பு!

  சென்னை கொளத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ரூபாய் நோட்டுகளால் பிரம்மாண்ட விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 10 அடி உயரத்தில், முழுவதும் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக அமர்ந்திருக்கும் இந்த விநாயகரை காண சுற்றுவட்டார மக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர். செல்வத்தை அள்ளித்தரும் விநாயகராக இவர் பக்தர்களால் போற்றப்படுகிறார்.

திருவண்ணாமலை: மீண்டும் மாற்றம்

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் செல்போன்களை லாக்கரில் வைக்க வசூலிக்கப்பட்ட ரூ.5 கட்டணம் நிறுத்தம். > இனி பக்தர்கள் தங்கள் செல்போன்களை இலவசமாக லாக்கரில் வைத்துச் செல்லலாம் என கோயில் நிர்வாகம் அறிவிப்பு .

ஆரணியில் பிரதோஷ வழிபாடு கோலாகலம்: பெரியநாயகி சமேத புத்திரகாமேட்டீஸ்வரர் மற்றும் கைலாசநாதர் கோவில்களில் சிறப்பு பூஜை

 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருக்கோவில்களான ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பிரதோஷ வழிபாட்டில் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ நாளில் சிவபெருமானை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறிப்பாக புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செல்போன் எடுத்து வர தடை!

  🔴 BREAKING NEWS: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செல்போன் எடுத்து வர தடை!* விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்குள் வரும் *செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை* விதிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களிலும் இந்த தடை அமலுக்கு வருகிறது.  *தடைக்கான காரணம் என்ன?* கோயிலுக்குள் பக்தர்கள் போட்டோ, வீடியோ, ரீல்ஸ் மற்றும் செல்ஃபி எடுப்பதால் கோயிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும், மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. *பக்தர்களுக்கான ஏற்பாடு:* - கோயிலில் தெற்கு மற்றும் கிழக்கு வாசல் அருகில் *செல்போன் கவுண்டர்* அமைக்கப்படும். - பக்தர்கள் தங்கள் செல்போனை அங்கு ஒப்படைத்து விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். - ஒரு செல்போனுக்கு *₹5 கட்டணம்* வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்படும். - கோயில் நுழைவாயிலில் "செல்போன் பயன்படுத்த தடை - Do not use mobile phones" என்ற அ...

திருவண்ணாமலை: ஆடிப்பூர பிரம்மோற்சவம் தொடக்கம் - உண்ணாமலை அம்மன் கோவிலில் கொடியேற்றம்

  திருவண்ணாமலை, ஆக. 05:* அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி அம்மன் சன்னதியான உண்ணாமலை அம்மன் கோவிலில் இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்தில் பக்தர்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தை தொடர்ந்து அடுத்த 10 நாட்களுக்கு தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூரில் எழுந்தருளியுள்ள *அருள்மிகு ஸ்ரீ முத்தாலவாழி மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்* சிறப்பாக நடைபெற்றது 🌺

  விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலவாழி மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதலே வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் ஊர் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.