விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்தாலவாழி மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதிகாலை முதலே வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் ஊர் பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
0 Comments