முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செல்போன் எடுத்து வர தடை!


 

🔴 BREAKING NEWS: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் செல்போன் எடுத்து வர தடை!*

விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலுக்குள் வரும் *செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன் எடுத்துச் செல்ல தடை* விதிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பெரிய கோயில்களிலும் இந்த தடை அமலுக்கு வருகிறது. 

*தடைக்கான காரணம் என்ன?*

கோயிலுக்குள் பக்தர்கள் போட்டோ, வீடியோ, ரீல்ஸ் மற்றும் செல்ஃபி எடுப்பதால் கோயிலின் புனிதத்தன்மை பாதிக்கப்படுவதாகவும், மற்ற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

*பக்தர்களுக்கான ஏற்பாடு:*

- கோயிலில் தெற்கு மற்றும் கிழக்கு வாசல் அருகில் *செல்போன் கவுண்டர்* அமைக்கப்படும்.

- பக்தர்கள் தங்கள் செல்போனை அங்கு ஒப்படைத்து விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும்.

- ஒரு செல்போனுக்கு *₹5 கட்டணம்* வசூலிக்கப்பட்டு ரசீது வழங்கப்படும்.

- கோயில் நுழைவாயிலில் "செல்போன் பயன்படுத்த தடை - Do not use mobile phones" என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. 

எனவே மேல்மலையனூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதை மனதில் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அதிமுக 55-ம் ஆண்டு தொடக்க விழா - பெரம்பூரில் மாபெரும் கறி விருந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

கந்தசஷ்டி விழா: குழந்தைகளின் பரதநாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது

மகாகவி பாரதியார் நகர் கருமாரியம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

இன்று சேவூர் திரு.S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் மலர் தூவி மரியாதை

திரு. எடப்பாடி பழனிசாமியிடம் தீபாவளி வாழ்த்து பெற்றார் 36-வது வட்ட கழக செயல்வீரர் அ.ஹரிஹரன்

வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்!