செய்யாறு மேல்சீசமங்கலம் கிராமத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

 


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் மேல்சீசமங்கலம் கிராமத்தில் இன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது.

அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இந்த முகாமில், கிராமத்தில் உள்ள அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் சுகாதாரப் பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கினர். பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து சொட்டு மருந்து போட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில்  திருவண்ணாமலை மாவட்டம்  மேல்சீசமங்கலம்  இணைச் செயலாளர் திரு.M.மதிமாறன் அவர்கள் நேரில் கலந்துகொண்டு முகாம் ஏற்பாடுகளை பார்வையிட்டார். மேலும், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரப் பணியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தார்.

போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த முகாமிற்கு பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.

Post a Comment

0 Comments