திருவண்ணாமலை மாவட்டம் வெங்கடேசன் பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடவு – தொழிலதிபர் திரு P. பூபதி அவர்களின் சமூக சேவைக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம் வெங்கடேசன் பட்டி கிராமத்தில் 500 மரக்கன்றுகள் நடவு – தொழிலதிபர் திரு P. பூபதி அவர்களின் சமூக சேவைக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா வெங்கடேசன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் திரு P.பூபதி அவர்கள் சென்னையில் EASY WAY LOGISTICS என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தனது சொந்த ஊர் வெங்கடேசன்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை மேம்படுத்தும் நோக்கில், கிராமம் முழுவதும் சுமார் 500 மரக்கன்றுகளை ஒவ்வொரு வீட்டின் வாசலுக்கு வெளியே நட்டு வைத்துள்ளார். மேலும் பொது இடங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.
இந்தப் பசுமை முயற்சியால் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததுடன், அவரது சமூக அக்கறை மற்றும் சேவை மனப்பான்மையை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
