வாட்ஸ்அப் பிளஸ் சேவை அறிமுகம்? மாதம் ரூ.79 கட்டணத்தில் புதிய அம்சங்கள்!
உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ்அப், பயனர்களுக்காக புதிய சந்தா அடிப்படையிலான "WhatsApp Plus" சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சேவைக்கு மாதம் ரூ.79 கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த பிரீமியம் திட்டத்தின் மூலம் பிரத்யேக ஸ்டிக்கர்கள், தனிப்பயன் ஆப் ஐகான் தேர்வு, செயலியின் தோற்றத்தை மாற்றும் வசதி, சிறப்பு ரிங்டோன்கள் மற்றும் கூடுதல் உரையாடல்களை பின் செய்யும் (Pin) வசதிகள் உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த சேவை தொடர்பாக வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பயனர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments