ரூ.2,000 நோட்டை தற்போதும் மாற்றிக்கொள்ளலாம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



புதுடெல்லி: தங்களிடம் ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்பவர்கள் தற்போதும் அதை மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நாடு முழுவதும் உள்ள 19 அலுவலகங்களில் நேரடியாக சென்று ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். மேலும் ரூ.2,000 நோட்டுகளை தபால் மூலம் அனுப்பினால், குறிப்பிடும் வங்கி கணக்கில் அந்த தொகை வரவு வைக்கப்படும்.

ரூ.2,000 நோட்டு தற்போதும் செல்லத்தக்கது என்றும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்டாலும், அவற்றை மாற்றுவதற்கான வசதி தொடர்ந்து வழங்கப்படும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments