இனி மகளிர் பஸ் விடியல் இல்லை! மகளிர் இலவச பஸ் பெயர் பலகையில் மாற்றம்


*சென்னை - 09.07.2026*

தமிழக அரசின் மகளிர் இலவச பேருந்து திட்டத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே *"மகளிர் விடியல் பயணம்"* என்ற பெயரில் இயங்கி வந்த இலவச பஸ்களின் பெயர் பலகைகளில் இருந்து *'விடியல்'* என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

இனி *"மகளிர் பயணம்"* என்ற பெயரிலேயே பேருந்துகள் இயக்கப்படும்.

படத்தில் உள்ளது போல கொளத்தூர் - குரோம்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் 91-வது வழித்தட பஸ்ஸின் LED பலகையில் "மகளிர் பயணம்" என்று மட்டுமே காட்டப்படுகிறது.

இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் குறித்து அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால் இலவச பயண திட்டம் தொடர்ந்து செயல்படும் என்று போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments