அர்ஜென்டினாவின் டோலிடோ பகுதிக்கு மேலே பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய விமானத்தில் இருந்து பயிற்சியாளர் ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
*என்ன நடந்தது?*
டோலிடோ பகுதிக்கு மேலே *செஸ்னா 150* ரக சிறிய பயிற்சி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதில் விமான பயிற்சியாளர் *லியாண்ட்ரோ ஆண்ட்ரெஸ் பெர்டாசோ (42)* மற்றும் மாணவி *ரோசாரியோ (22)* ஆகியோர் இருந்தனர்.
பறக்கும் போது திடீரென விமான பயிற்சியாளர் பாராசூட் இல்லாமல் விமானத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
*மாணவியின் துணிச்சல்*
விமானத்தில் தனியாக இருந்த மாணவி ரோசாரியோ முதலில் அதிர்சியடைந்தாலும், உடனடியாக தன்னை சுதாரித்துக் கொண்டார்.
தனது பயிற்சி அனுபவத்தை வைத்து அந்த விமானத்தை அவர் தனியாகவே சாமர்தியமாக பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
*விசாரணை*
இந்த சம்பவம் குறித்து அர்ஜென்டினா நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சியாளர் ஏன் இப்படி செய்தார் என்பது குறித்த காரணம் இதுவரை தெரியவில்லை.
மாணவியின் செயலை அந்நாட்டு விமானத்துறை வீரச் செயல் என பாராட்டியுள்ளது.
0 Comments