முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

சிக்னல் இல்லாத இடத்திலும் பேசலாம்! BSNL அறிமுகப்படுத்திய செயற்கைக்கோள் போன்

 


இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான *BSNL* மொபைல் சிக்னல் கிடைக்காத பகுதிகளிலும் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய *செயற்கைக்கோள் போனை* அறிமுகப்படுத்தியுள்ளது.

*முக்கிய அம்சங்கள்:*

1. *விலை:* இந்த செயற்கைக்கோள் போனின் விலை *₹1,34,166* ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2. *செயல்பாடு:*

மொபைல் டவர்கள் இல்லாத இடங்களிலும் நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைந்து இந்த போன் செயல்படும்.

3. *வசதிகள்:* 

தொலைதூர பகுதிகளில் குரல் அழைப்பு, அவசரகால *SOS வசதி*, நீண்ட நேர பேட்டரி மற்றும் வலுவான வடிவமைப்பு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

4. *யாருக்கு பயன்படும்:* 

பாதுகாப்புப் படைகள், பேரிடர் மீட்பு பணியாளர்கள், கடல்சார் துறை மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரிவோருக்காக இந்த போன் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

*வாங்குவது எப்படி?*

இந்த போனை வாங்கவோ பயன்படுத்தவோ *தொலைத்தொடர்பு துறையின் (DoT)* முன் அனுமதி கட்டாயமாகும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள *BSNL அலுவலகத்தை* அணுகலாம்.

இந்த புதிய சேவை மலைப்பகுதி, கடல் மற்றும் எல்லைப்புறங்களில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


WORLD NEWS 512

PRESS REPORTER 

ME.GOPI 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அதிமுக 55-ம் ஆண்டு தொடக்க விழா - பெரம்பூரில் மாபெரும் கறி விருந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

கந்தசஷ்டி விழா: குழந்தைகளின் பரதநாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது

மகாகவி பாரதியார் நகர் கருமாரியம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

இன்று சேவூர் திரு.S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் மலர் தூவி மரியாதை

திரு. எடப்பாடி பழனிசாமியிடம் தீபாவளி வாழ்த்து பெற்றார் 36-வது வட்ட கழக செயல்வீரர் அ.ஹரிஹரன்

வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்!