முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முக்கிய செய்திகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

மகாகவி பாரதியார் நகர் கருமாரியம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு மகாகவி பாரதி நகர் 4-வது பிரதான சாலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் திரு.அர்சல், திரு.தியாகு, திரு.பவன், திரு.செந்தில்குமார், திரு.ஹரிஹரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம் - 1000 பக்தர்களுக்கு அன்னதானம், இரவில் திருவீதி

16/11/2026 நேற்று வில்லிவாக்கம் சிட்கோ பகுதி அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் நேற்று காலை 10 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து மதியம் 12 மணி அளவில் சுமார் ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இதனைத் தொடர்ந்து இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, ஆட்டம் மற்றும் மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. சுவாமி சிக்கோ நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பகுதி மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேல்மலையனூர் செல்லும் பக்தர்கள் முதலில் யோக முனீஸ்வரரை வழிபடுவது சிறப்பு! 🙏🏻

  செஞ்சி, நவ. 9  விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ யோக முனீஸ்வரர் ஆலயம், மேல்மலையனூர் செல்லும் பக்தர்களின் முதல் வழிபாட்டுத் தலமாக திகழ்ந்து வருகிறது. ஆடி அமாவாசை, மாதாந்திர அமாவாசை, ஆடி வெள்ளி, மாசி பெருவிழா உள்ளிட்ட விழாக் காலங்களில் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள், செஞ்சியில் அமைந்துள்ள யோக முனீஸ்வரரை வழிபட்ட பின்னர் மேல்மலையனூர் செல்வது வழக்கமாக உள்ளது.  *பக்தர்களின் நம்பிக்கை:* யோக முனீஸ்வரரை தரிசித்து, அவரிடம் உத்தரவு பெற்று, பின்னர் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டால் இறையருள் முழுமையாக கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. acdd காவல் தெய்வமாக விளங்கும் முனீஸ்வரர், யாத்திரைக்கு தடையின்றி, பாதுகாப்பாக சென்று வர அருள்புரிவார் என்றும், தீய சக்திகள், கண் திருஷ்டி, தோஷங்கள் நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். *மேல்மலையனூர் சிறப்பு:* செஞ்சியில் ...

அரசு பேருந்துகளில் செல்போன் ஸ்பீக்கர் ஒலி கூடாது - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்

 சென்னை, ஜூலை 28* தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் TNSTC பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போனை ஸ்பீக்கர் ஒலியில் வைத்து Video, Songs, Reels பார்பதால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் இனிமேல் அரசு பேருந்துகளில் கைபேசியை ஸ்பீக்கர் முறையில் பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. *என்ன செய்யலாம்?* செல்போன் ஸ்பீக்கருக்கு பதிலாக Earphone அல்லது Headphone பயன்படுத்தி பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு பேருந்துகளிலும் "ஸ்பீக்கர் தடை - Earphone பயன்படுத்தவும்" என்ற ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் இது குறித்து பயணிகளுக்கு அறிவுறுத்துவார்கள். *அமைதியான பயணம் - பாதுகாப்பான பயணம்* என்ற குறிக்கோளுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து திடீரென குதித்த பயிற்சியாளர்! மாணவி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கி அதிசயம்

*தேதி: 09.07.2026 | இடம்: அர்ஜென்டினா* அர்ஜென்டினாவின் டோலிடோ பகுதிக்கு மேலே பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய விமானத்தில் இருந்து பயிற்சியாளர் ஒருவர் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. *என்ன நடந்தது?* டோலிடோ பகுதிக்கு மேலே *செஸ்னா 150* ரக சிறிய பயிற்சி விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அதில் விமான பயிற்சியாளர் *லியாண்ட்ரோ ஆண்ட்ரெஸ் பெர்டாசோ (42)* மற்றும் மாணவி *ரோசாரியோ (22)* ஆகியோர் இருந்தனர். பறக்கும் போது திடீரென விமான பயிற்சியாளர் பாராசூட் இல்லாமல் விமானத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  *மாணவியின் துணிச்சல்* விமானத்தில் தனியாக இருந்த மாணவி ரோசாரியோ முதலில் அதிர்சியடைந்தாலும், உடனடியாக தன்னை சுதாரித்துக் கொண்டார். தனது பயிற்சி அனுபவத்தை வைத்து அந்த விமானத்தை அவர் தனியாகவே சாமர்தியமாக பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. *விசாரணை* இந்த சம்பவம் குறித்து அர்ஜென்டினா நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சியாளர் ஏன் இப்படி செய்தார் என்பது குறித்த காரணம் இதுவரை ...

சிக்னல் இல்லாத இடத்திலும் பேசலாம்! BSNL அறிமுகப்படுத்திய செயற்கைக்கோள் போன்

  இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான *BSNL* மொபைல் சிக்னல் கிடைக்காத பகுதிகளிலும் தொடர்பு கொள்ளும் வகையில் புதிய *செயற்கைக்கோள் போனை* அறிமுகப்படுத்தியுள்ளது. *முக்கிய அம்சங்கள்:* 1. *விலை:* இந்த செயற்கைக்கோள் போனின் விலை *₹1,34,166* ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2. *செயல்பாடு:* மொபைல் டவர்கள் இல்லாத இடங்களிலும் நேரடியாக செயற்கைக்கோள்களுடன் இணைந்து இந்த போன் செயல்படும். 3. *வசதிகள்:*  தொலைதூர பகுதிகளில் குரல் அழைப்பு, அவசரகால *SOS வசதி*, நீண்ட நேர பேட்டரி மற்றும் வலுவான வடிவமைப்பு ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன. 4. *யாருக்கு பயன்படும்:*  பாதுகாப்புப் படைகள், பேரிடர் மீட்பு பணியாளர்கள், கடல்சார் துறை மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பணிபுரிவோருக்காக இந்த போன் குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. *வாங்குவது எப்படி?* இந்த போனை வாங்கவோ பயன்படுத்தவோ *தொலைத்தொடர்பு துறையின் (DoT)* முன் அனுமதி கட்டாயமாகும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள *BSNL அலுவலகத்தை* அணுகலாம். இந்த புதிய சேவை மலைப்பகுதி, கடல் மற்றும் எல்லைப்புறங்களில் உள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படு...

வீட்டிலிருந்தபடியே மருத்துவ முன்பதிவு செய்ய ‘நலம்AI’ வாட்ஸ்அப் சேவை அறிமுகம்

  தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி – வாட்ஸ்அப் மூலம் எளிதாக மருத்துவ அப்பாயின்ட்மெண்ட் பெறலாம் சென்னை, ஜூலை 8: பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ முன்பதிவு செய்வதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தேசிய நலவாழ்வுக் குழுமம் (NHM) இணைந்து ‘நலம்AI’ என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் மூலம் மக்கள் மருத்துவமனைக்கு நேரில் செல்லாமல், தங்களது செல்போன் மூலமாகவே மருத்துவ ஆலோசனைக்கான முன்பதிவுகளை எளிதாக மேற்கொள்ள முடியும். முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் நெஞ்சக நோய் பிரிவில் இந்த சேவை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. பின்னர் இதனை மற்ற அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சேவையை பயன்படுத்துவது எப்படி? * 96192 22999 என்ற எண்ணை மொபைலில் சேமிக்கவும். * வாட்ஸ்அப்பில் “HI” என்று செய்தி அனுப்பவும். * சாட்பாட் வழங்கும் வழிமுறைகளை பின்பற்றி மருத்துவ முன்பதிவை மேற்கொள்ளவும். தொடக்க விழா இந்த சேவையை தமிழ்நாடு மருத்துவ...