அலர்ட்! E20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன மைலேஜ் 2% முதல் 6% வரை குறையலாம் - வாகன ஆராய்சி சங்கம் தகவல்

 


இந்தியா மத்திய அரசு E20 எரிபொருளை படிப்படியாக அறிமுகப்படுத்தி வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்திய வாகன ஆராய்சி சங்கம் வெளியிட்ட தகவலின்படி, E20 பெட்ரோல் பயன்படுத்தும் போது வாகனங்களின் மைலேஜ் 2 முதல் 6% வரை குறைய வாய்புள்ளது.

E20 பெட்ரோல் என்பது 20% எத்தனால் கலந்த பெட்ரோல் ஆகும். இது "Cleaner Fuel" என அழைக்கப்படுகிறது.

*புதிய வாகனங்களுக்கு பாதிப்பு இல்லை:*

E20-க்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்ட புதிய வாகனங்களில் *எஞ்சின் பாதிப்போ அல்லது செயல்திறன் குறைபாடோ ஏற்படாது* என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே பழைய வாகனம் வைத்திருப்பவர்கள் E20 பெட்ரோல் நிரப்பும் முன் மைலேஜ் வித்தியாசத்தை கவனத்தில் கொள்வது நல்லது.

Post a Comment

0 Comments