ஆவினில் புதிய அறிமுகம்! 20 ரூபாய்க்கு 'மில்க் ரஸ்க்' விற்பனை


 

மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் தற்போது புதிய பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

பால், நெய், தயிர், பால்கோவா, மைசூர் பாக், மில்க் பிஸ்கட் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் ஆவின், தற்போது ரஸ்க் விற்பனையிலும் களமிறங்கியுள்ளது.

100 கிராம் எடையுள்ள 'ஆவின் மில்க் ரஸ்க்' பாக்கெட்டின் விலை ₹20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 கிராம் கொண்ட ஆவின் ரஸ்க் 12 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது.

தரமான பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் ஆவினின் இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments