பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் கோயில் புனிதத்தை கருதி, திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்குள் வரும் செப்டம்பர் 1, 2026 முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் 5 இடங்களில் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்களது செல்போன்களை வெறும் ரூபாய் 5 கட்டணத்தில் ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் முடிந்ததும் டோக்கனை காண்பித்து செல்போனை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
முக்கியமாக, இந்த தடையை மீறி யாரேனும் செல்போன் எடுத்து சென்றால், அது பறிமுதல் செய்யப்படுவதுடன் காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது."