முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை - பக்தர்களுக்கு அன்னதானம்!


ஆரணி அருகே உள்ள வெங்கடேசன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை (27.08.2026) மாலை சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றன.

அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய் பாபாவுக்கு உகந்த வியாழக் கிழமையை முன்னிட்டு, ஆலயத்தில் மாலையில்  சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூஜைகளை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறுவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஆலய நிர்வாகத்தினர் இந்த அன்னதான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த ஆலயத்தில் இதுபோன்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆரணியில் அதிர்ச்சி: 500 கிலோ கெட்டுப்போன அசைவ உணவு பறிமுதல்

  ஆரணி:  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காஜிவாடை பகுதியில் இயங்கி வந்த அசைவ உணவு விற்பனை கடையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி, மீன் ஆகியவற்றை நகராட்சி அதிகாரிகள் இன்று 01.07.2026 அதிரடியாக பறிமுதல் செய்தனர். நடந்தது என்ன? நகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்னு பிரதாப் ஆகியோர் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது கடையில் ஆட்டுத்தலை, கால், மீன் உள்ளிட்டவற்றை குளிரூட்டும் பெட்டியில் முறையாக பராமரிக்காமல், அழுகிய நிலையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் விவரம்: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன அசைவ கறியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை: மழைக்காலத்தில் அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும். எனவே பொதுமக்கள் ஓட்டல், கடைகளில் இறைச்சி வாங்கும்போது அதன் தரத்தை நன்கு பரிசோதித்து வாங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தவெக கட்சி சார்பில் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைப்பு - பொதுமக்கள் நன்றி

  திருவண்ணாமலை மாவட்டத்தில் தவெக கட்சியினர் ஆரணியில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் குறித்து வெளியான செய்திக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரணியில் சேதமடைந்திருந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மின் விபத்து அச்சத்தில் இருந்து  ஊர் பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் விரைவாக நடைபெற உதவியாக இருந்த  தமிழக வெற்றிக் கழக கட்சியினர் திருவண்ணாமலை  வடக்கு மாவட்ட   ஆரணி தென்கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு JSV சுதன் M.Com அவர்கள்  மற்றும்  தென் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் திரு AS.தண்டபாணி press பையூர்  அவர்களும் மற்றும்  மின்வாரிய துறை அதிகாரி அவர்களுக்கும் பொது மக்கள் சார்பில் மிகவும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி மலை மேல்சிசமங்கலத்தில் தவெக கட்சியினர் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

  திருவண்ணாமலை:  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம், கேக் வெட்டி கொண்டாட்டம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்சிசமங்கலம் கிளை சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர்.தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கி, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர். தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் திரு.கே.வெங்கடேஷ் குமார் மற்றும் ஒன்றிய இணைச் செயலாளர் திரு.எம்.மதிமாறன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  இந் நிகழ்ச்சியில் தவெக கழக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் திரு எழில், ராஜசேகர், கேசவேல், ஏழுமலை, பிரகாஷ், தமிழ்வாணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு முன்னிலை வகித்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்று, இனிப்புகளை பெற்றுச் சென்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினரின் இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.