சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில் இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா
த.வெ.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - விலைவாசி உயர்வை கண்டித்து திருவண்ணாமலையில் திமுக மகளிர் அணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை, அக்.31-
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
த.வெ.க ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாநகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேடையில் திமுக தலைவர்கள் படம் பொறித்த பிரமாண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணியினர் திரளாக பங்கேற்றனர்.
*செய்தி: E.கோபி, செய்தியாளர் - சென்னை*
*Gopi 12 Media*
