முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

மேல்மலையனூர் செல்லும் பக்தர்கள் முதலில் யோக முனீஸ்வரரை வழிபடுவது சிறப்பு! 🙏🏻

 


செஞ்சி, நவ. 9 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ யோக முனீஸ்வரர் ஆலயம், மேல்மலையனூர் செல்லும் பக்தர்களின் முதல் வழிபாட்டுத் தலமாக திகழ்ந்து வருகிறது.

ஆடி அமாவாசை, மாதாந்திர அமாவாசை, ஆடி வெள்ளி, மாசி பெருவிழா உள்ளிட்ட விழாக் காலங்களில் மேல்மலையனூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள், செஞ்சியில் அமைந்துள்ள யோக முனீஸ்வரரை வழிபட்ட பின்னர் மேல்மலையனூர் செல்வது வழக்கமாக உள்ளது. 

*பக்தர்களின் நம்பிக்கை:*

யோக முனீஸ்வரரை தரிசித்து, அவரிடம் உத்தரவு பெற்று, பின்னர் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மனை வழிபட்டால் இறையருள் முழுமையாக கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. acdd

காவல் தெய்வமாக விளங்கும் முனீஸ்வரர், யாத்திரைக்கு தடையின்றி, பாதுகாப்பாக சென்று வர அருள்புரிவார் என்றும், தீய சக்திகள், கண் திருஷ்டி, தோஷங்கள் நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

*மேல்மலையனூர் சிறப்பு:*

செஞ்சியில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள மேல்மலையனூரில், அங்காளம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இதனால் செஞ்சி வழியாக செல்லும் பக்தர்கள், முதலில் யோக முனீஸ்வரர் கோவிலில் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, மாலை அணிவித்து வழிபட்டு விட்டு, பின்னர் மலையனூர் நோக்கி பயணத்தை தொடர்கின்றனர்.

*செய்தியாளர்: E.கோபி, சென்னை*

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அதிமுக 55-ம் ஆண்டு தொடக்க விழா - பெரம்பூரில் மாபெரும் கறி விருந்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

கந்தசஷ்டி விழா: குழந்தைகளின் பரதநாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது

மகாகவி பாரதியார் நகர் கருமாரியம்மன் கோவிலில் வள்ளி தேவசேனா சமேத முருகன் திருக்கல்யாணம் கோலாகலம்

இன்று சேவூர் திரு.S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் மலர் தூவி மரியாதை

திரு. எடப்பாடி பழனிசாமியிடம் தீபாவளி வாழ்த்து பெற்றார் 36-வது வட்ட கழக செயல்வீரர் அ.ஹரிஹரன்

வில்லிவாக்கம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா மிக சிறப்பாக நடைபெற்றது - ஏராளமான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம்!