திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் திடீரென பலத்த மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பதிவாகியதால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்.
கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் காரணமாக அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை நிவாரணமாக அமைந்தது. மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதுடன், வெப்பத்தின் தாக்கமும் குறைந்தது.
ஆரணி மற்றும் பாலம் அருகே ஆலங்கட்டி மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மழையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மேலும், விவசாயிகளும் இந்த மழை பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

0 Comments