முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

முக்கிய செய்திகள்

வில்லிவாக்கம் கொண்ணூரில் ஸ்ரீ அமிர்தவல்லித் தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை - பக்தர்களுக்கு அழைப்பு

 சென்னை, நவ.21: சென்னை வில்லிவாக்கம் கொண்ணூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அமிர்தவல்லித்தாயார் உடனுறை ஸ்ரீ சௌமிய தாமோதரப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாருக்கு ஏகதின இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. வரும் 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை மாதம் 6-ம் தேதி, திரயோதசி திதி, அஸ்வினி நட்சத்திரத்தில்  இந்த சிறப்பு இலட்சார்ச்சனை நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் இலட்சார்ச்சனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.300/- செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ அமிர்தவல்லித்தாயாரின் அருளைப் பெறுமாறு கோயில் தக்கார் ஆ.குமரன், செயல் அலுவலர் சு.நித்தியகலா மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்புக்கு : 7598235357 ✍️ செய்தியாளர் : நம்ம ஊர் மீடியா

திருமணியில் கந்தசஷ்டி விழா: வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியருக்கு இன்று மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை!

 திருமணி. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே திருமணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் இன்று கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இன்று மாலை 6.00 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனவே பொது மக்கள், பக்தர்கள், அடியார் பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமியின் திருவருளைப் பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். - E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

அருள்மிகு ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் சூரசம்ஹாரம் பெருவிழா - தெய்வ திருமண வைபவம்

 விழா அழைப்பிதழ். வில்லிவாக்கம், நவ. 15: அருள்மிகு ஶ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் பெருவிழா மற்றும் தெய்வ திருமண வைபவம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல்: 15.11.2026, இன்று மாலை 5.30 மணிக்கு - சூரசம்ஹாரம் பெருவிழா 16.11.2026, நாளை மாலை 6.00 மணிக்கு - தெய்வ திருமண வைபவம் இந்த விழாவில் பக்தர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கோயில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் காட்சியை காண ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா

வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா: அம்மனிடம் சக்திவேல் பெற்ற முருகன் - பக்தர்கள் பரவசம்!

  வில்லிவாக்கம், நவ. 15: வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, அம்மனிடம் இருந்து முருகப்பெருமான் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்தனர். முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என்று முழக்கமிட்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.  E.கோபி, செய்தியாளர், நம்ம ஊர் மீடியா, வில்லிவாக்கம்

கந்தசஷ்டி விழா: குழந்தைகளின் பரதநாட்டியம் பார்வையாளர்களை கவர்ந்தது

 வில்லிவாக்கம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறுமிகள் பாரம்பரிய உடையணிந்து, பக்தி பாடல்களுக்கு ஏற்ப அழகான பரதநாட்டியம் ஆடினர். அவர்களின் நடனத்தை கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ரசித்து பார்த்தனர். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளை பெற்றோர்கள் மற்றும் பக்தர்கள் பாராட்டினர். *- செய்தியாளர்: E.கோபி, நம்ம ஊர் மீடியா*

முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை: ஊஞ்சல் சேவை, ஆன்மீக சொற்பொழிவு, அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

*வில்லிவாக்கம், நவ. 11:* சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (11/11/2026, புதன்கிழமை) முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதலே கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முருகனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் முருகப் பெருமானுக்கு அழகிய ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!" என முழக்கமிட்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் முருகனின் பெருமைகள் குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர். பக்தர்கள் அனைவரும் அதனை மிகவும் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்...

ஆரணி கோட்டாட்சியராக கு. சௌமியா பொறுப்பேற்பு!

ஆரணி,  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியராக (RDO) திருமதி கு. சௌமியா இன்று தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். *அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து* புதிய கோட்டாட்சியராக பொறுப்பேற்ற அவருக்கு வருவாய்த் துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மலர்க்கொத்துகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். *பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு* தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோட்டாட்சியர் கு. சௌமியா, ஆரணி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மற்றும் குறைகளுக்கு முன்னுரிமை அளித்து விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அரசுத் திட்டங்கள் பொதுமக்களை விரைவாகச் சென்றடைய அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரித்தல், வருவாய்த் துறை சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதத்தைத் தவிர்த்தல் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட பணிகளில் சிறப்புக் கவனம் செலுத்...

வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன!

 வில்லிவாக்கத்தில் கந்தசஷ்டி விழா - சிறப்பாக விசேஷ பூஜைகள் நடந்தன! வில்லிவாக்கம் சிட்கோ நகர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 2026 கந்தசஷ்டி விழா மற்றும் சூரசம்ஹார மஹோற்சவ பெருவிழா சிறப்பாக தொடங்கியது. இன்று காலை மகா கணபதி ஹோமம், கொடியேற்றுதல் நடைபெற்றதை தொடர்ந்து, மாலையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் சிறப்பாக நடந்தன. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமானை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.  தேதி : 09-11-2026, திங்கட்கிழமை 📍 இடம் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சிட்கோ நகர், வில்லிவாக்கம் ✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா | Gopi 12 *🙏 ஓம் முருகா! 🙏*

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு - பெரும் சோகம்!

  திருவண்ணாமலை அருகே சமுத்திரம் ஏரியில் குளிக்க சென்றபோது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், 4 சிறுமிகள் உட்பட 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பெரும்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தை சேர்ந்தவர்கள் ஏரிக்கு குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடல்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம்ம ஊரு மீடியா சார்பாக ஆழ்ந்த இரங்கல். தேதி : 09-11-2026, திங்கட்கிழமை ✍️ செய்தி : நம்ம ஊரு மீடியா 

இன்று சேவூர் திரு.S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் மலர் தூவி மரியாதை

 ஆரணி சட்டமன்ற தொகுதி, செய்யார் தெற்கு ஒன்றியம், கொருக்காத்தூர் S.சசிகுமார் அவர்களின் தந்தை C.செல்வராஜ் அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி விழா இன்று (09.11.2026) நடைபெற்றது. இந்த நினைவு அஞ்சலி விழாவில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயலாளர், முன்னாள் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர், முன்னாள் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திருமிகு சேவூர் S.இராமச்சந்திரன் EX MLA அவர்கள் நேரில் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வில் ஆரணி நகர கழக செயலாளர் A.அசோக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் N.வாசு மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். நம்ம ஊரு மீடியா - E.கோபி  செய்தியாளர், சென்னை

சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரம் காட்டும் தூய்மை பணியாளர்கள்!

சென்னை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகள் சாலைகளில் குவிந்து கிடந்தன. இதனை அகற்றும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் இன்று அதிகாலையில் இருந்தே தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலைகளில் கிடந்த பட்டாசு கழிவுகள், குப்பைகளை சேகரித்து வாகனங்களில் ஏற்றி அகற்றி வருகின்றனர். இதனால் வில்லிவாக்கம் பகுதி மீண்டும் சுத்தமாக மாறி வருகிறது. தூய்மை பணியாளர்களின் இந்த சேவையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். *நம்ம ஊரு மீடியா - E.கோபி செய்தியாளர், சென்னை*