09 JUL 2026, சென்னை
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காஜிவாடை பகுதியில் இயங்கி வந்த அசைவ உணவு விற்பனை கடையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி, மீன் ஆகியவற்றை நகராட்சி அதிகாரிகள் இன்று 01.07.2026 அதிரடியாக பறிமுதல் செய்தனர். நடந்தது என்ன? நகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்னு பிரதாப் ஆகியோர் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது கடையில் ஆட்டுத்தலை, கால், மீன் உள்ளிட்டவற்றை குளிரூட்டும் பெட்டியில் முறையாக பராமரிக்காமல், அழுகிய நிலையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் விவரம்: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன அசைவ கறியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை: மழைக்காலத்தில் அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும். எனவே பொதுமக்கள் ஓட்டல், கடைகளில் இறைச்சி வாங்கும்போது அதன் தரத்தை நன்கு பரிசோதித்து வாங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
