சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் நேற்று இரவு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினர் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
குட்டி கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. வண்ண பலூன்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் தொட்டில் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.
இரவு முழுவதும் நடைபெற்ற இந்த பக்தி கொண்டாட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
*இடம்: சென்னை, வில்லிவாக்கம் சிட்கோ நகர்*
*Reporter: Gopi 12 News*