முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புதிய செய்திகள் சென்னை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மெரினா கடற்கரையில் AC பேருந்து நிறுத்தம்! ₹78.40 லட்சத்தில் நவீன வசதிகள்

  *சென்னை:* சென்னை மெரினா கடற்கரை, அண்ணா சதுக்கம் அருகே பயணிகளின் வசதிக்காக *குளிர்சாதன வசதி கொண்ட நவீன பேருந்து நிறுத்தம்* அமைக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. *திட்ட மதிப்பு:* இந்த பணிக்காக சுமார் *₹78.40 லட்சம்* மதிப்பில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. *என்னென்ன வசதிகள் இருக்கும்?* 1. *AC வசதி* - வெயில், மழையில் பயணிகள் நிம்மதியாக காத்திருக்க 2. *நிழற்குடை* - மழை, வெயில் பாதுகாப்பு 3. *டிஜிட்டல் தகவல் பலகை* - பேருந்து வரும் நேரம், வழித்தடம் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வசதி 4. *இருக்கைகள்* மற்றும் *CCTV கண்காணிப்பு* வசதிகளும் இருக்கும் என எதிர்பார்கப்படுகிறது மெரினாவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், இந்த நவீன பேருந்து நிறுத்தம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்த திட்டம் முடிந்ததும் சென்னையில் முதல் *Smart AC Bus Shelter* இதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

லண்டனில் பட்டம் பெற்ற பேரன்: இன்பநிதியை வாழ்திய மு.க.ஸ்டாலின்

சென்னை:  தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேரனும், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மகனுமான *இன்பநிதி* இங்கிலாந்து லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயர்படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். *விளையாட்டு மேம்பாடு துறையில் பட்டம்* மான்செஸ்டர் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் *Sports Development / Sports Studies* தொடர்பான உயர்படிப்பை இன்பநிதி முடித்துள்ளார். *குடும்பத்துடன் கலந்து கொண்ட பட்டமளிப்பு விழா* இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவை நேரில் காண முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் லண்டன் சென்றிருந்தனர். விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் தனது பேரனை பாசத்துடன் கட்டித் தழுவி வாழ்தினார். பாட்டி துர்கா ஸ்டாலின் மற்றும் தந்தை உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

சென்னையில் தங்கம் விலை திடிரென்று உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் காணப்பட்டது. காலையில் சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையான தங்கத்தின் விலை, தற்போது சடாரென ரூ.800 உயர்ந்துள்ளது. இதனால் 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,560-க்கும், 1 கிராம் ரூ.13,320-க்கும் விற்பனையாகிறது. காலை முதல் மாலை வரை ரூ.1040 வரை விலை மாற்றம் ஏற்பட்டதால் நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கமே இதற்கு காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.  

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.1,000 கோடி முதலீடு - 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ரூ.1,000 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. இதன் மூலம் 1,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலமைச்சர் *திரு ஜோசப் விஜய்* அவர்கள் முன்னிலையில் கையெழுத்தானது. தொழில் வளர்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. WORLD NEWS 512