சென்னையில் தங்கம் விலை திடிரென்று உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு


சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

காலையில் சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையான தங்கத்தின் விலை, தற்போது சடாரென ரூ.800 உயர்ந்துள்ளது. இதனால் 1 சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,560-க்கும், 1 கிராம் ரூ.13,320-க்கும் விற்பனையாகிறது.

காலை முதல் மாலை வரை ரூ.1040 வரை விலை மாற்றம் ஏற்பட்டதால் நகை வாங்க வந்த வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்தனர். சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கமே இதற்கு காரணம் என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.


 

Post a Comment

0 Comments