சென்னையில் திடிர் மழை

 சென்னையில் திடீர் மழை பெய்தது.

சென்னையில் கோயம்பேடு அம்பத்தூர் கொரட்டூர் வில்லிவாக்கம் போன்ற பல பகுதிகளில் இன்று மாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்தது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலையால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் தொடங்கிய வானிலை, பின்னர் மிதமான மழையாக பெய்தது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தாலும், வெப்பநிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.

Post a Comment

0 Comments