அரசு பேருந்துகளில் செல்போன் ஸ்பீக்கர் ஒலி கூடாது - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்


 சென்னை, ஜூலை 28*

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் TNSTC பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போனை ஸ்பீக்கர் ஒலியில் வைத்து Video, Songs, Reels பார்பதால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இதனால் இனிமேல் அரசு பேருந்துகளில் கைபேசியை ஸ்பீக்கர் முறையில் பயன்படுத்தக் கூடாது என போக்குவரத்துத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

*என்ன செய்யலாம்?*

செல்போன் ஸ்பீக்கருக்கு பதிலாக Earphone அல்லது Headphone பயன்படுத்தி பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து அரசு பேருந்துகளிலும் "ஸ்பீக்கர் தடை - Earphone பயன்படுத்தவும்" என்ற ஸ்டிக்கர் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் இது குறித்து பயணிகளுக்கு அறிவுறுத்துவார்கள்.

*அமைதியான பயணம் - பாதுகாப்பான பயணம்* என்ற குறிக்கோளுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments