ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் ரூ.500 அபராதம் – ஜூலை 1 முதல் அமல்
இந்திய ரயில்வே நிர்வாகம், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை உயர்த்த முடிவு செய்துள்ளது. தற்போது ரூ.250 ஆக உள்ள அபராதம், ஜூலை 1 முதல் ரூ.500 ஆக உயர்த்தப்பட உள்ளது.
மேலும், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தல், அபராதத் தொகை செலுத்தாதது மற்றும் டிக்கெட் விதிமுறைகளை மீறுவது போன்ற நடவடிக்கைகள் மீது கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணிகள் அனைவரும் செல்லுபடியாகும் டிக்கெட்டுடன் பயணம் செய்ய வேண்டும் என்றும், விதிமுறைகளை பின்பற்றி அபராதத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

0 Comments