நடுரோட்டில் சாய்ந்த மின் கம்பம்

 


இன்று காலையில் நடுரோட்டில் சாய்ந்த மின்கம்பம்: பொதுமக்கள் அச்சம்

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள முக்கிய சாலையில் உள்ள மின்கம்பம் ஒன்று சாய்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் அதிகளவில் செல்லும் இந்த பகுதியில் மின்கம்பம் சாலையின் நடுப்பகுதியை நோக்கி சாய்ந்துள்ளதால், எந்நேரத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாய்ந்துள்ள மின்கம்பத்தை சீரமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments