ரூ.21 லட்சம் மோசடி: திருவண்ணாமலையில் தம்பதி கைது



திருவண்ணாமலை பொன்னுசாமி நகரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.21 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர்.

76-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சக்திவேல் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களின் புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments