ஆடி பௌர்ணமி கிரிவலத்தில் மொபைல் திருடிய 3 பேர் கைது


 *திருவண்ணாமலை:*

ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவல பாதையில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.

இந்நிலையில் கூட்டத்தை பயன்படுத்தி மொபைல் போன் திருடிய 3 நபர்கள் பக்தர்களிடம் சிக்கினர். மொத்தம் 3 பேரின் மொபைல் போன்களை அவர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

திருட்டை கவனித்த பொதுமக்கள் உடனடியாக அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிரிவலம் வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் கவனமாக இருக்குமாறு போலிசார் அறிவுறுத்தியுள்ளனர் 

Post a Comment

0 Comments