தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது 5G சேவை தொடர்பாக பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5G டேட்டாவை *Mobile Hotspot* மூலம் பிற மொபைல்கள், லேப்டாப் போன்ற சாதனங்களுக்கு *Share செய்து பயன்படுத்த முடியாது* என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பலர் தங்களது மொபைல் டேட்டாவை Hotspot மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இனி ஏர்டெல் 5G பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்காது என கூறப்படுகிறது.
*Airtel 5G Plus விதிமுறை என்ன?*
அதேபோல் *Airtel 5G plus* சேவை கிடைக்கும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வரம்பற்ற 5G சேவையை பயன்படுத்த முடியும் எனவும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
5G Plus இல்லாத இடங்களில் இணையம் 4G வேகத்திலேயே செயல்படும்.
இந்த புதிய விதிமுறையால் Hotspot-ஐ அதிகம் பயன்படுத்துவோர் மற்றும் ஒரே டேட்டாவை பல சாதனங்களில் பயன்படுத்துவோர் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காஜிவாடை பகுதியில் இயங்கி வந்த அசைவ உணவு விற்பனை கடையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி, மீன் ஆகியவற்றை நகராட்சி அதிகாரிகள் இன்று 01.07.2026 அதிரடியாக பறிமுதல் செய்தனர். நடந்தது என்ன? நகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்னு பிரதாப் ஆகியோர் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது கடையில் ஆட்டுத்தலை, கால், மீன் உள்ளிட்டவற்றை குளிரூட்டும் பெட்டியில் முறையாக பராமரிக்காமல், அழுகிய நிலையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் விவரம்: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன அசைவ கறியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை: மழைக்காலத்தில் அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும். எனவே பொதுமக்கள் ஓட்டல், கடைகளில் இறைச்சி வாங்கும்போது அதன் தரத்தை நன்கு பரிசோதித்து வாங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
