பெரம்பலூர் பைன் பிட் நிறுவனத்தில் அமைச்சர் ஆனந்த் திடீர் ஆய்வு




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் தொழில் வளர்சியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 அதன் ஒரு பகுதியாக இன்று 08.07.2026, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் அமைந்துள்ள பைன் பிட் நிட்டிங் அண் கோ நிறுவனத்தின் பொதுப் பயன்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

 இந்த ஆய்வின் போது நிறுவனத்தில் நடைபெறும் உற்பத்தி பணிகள், பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகள், தொழில் வளர்ச்சி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்பு உருவாக்கம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

 மேலும் உள்ளூர் மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் நிறுவனம் செயல்பட வேண்டும் என்றும், அரசின் திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் நிறுவன நிர்வாகிகள் உடனிருந்தனர். 
 இடம்: பெரம்பலூர், பாடாலூர் 
தேதி: 08.07.2026

Post a Comment

0 Comments