கணவன்-மனைவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

 

கணவன் - மனைவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை - ஆரணி அருகே சோகம்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று கணவன் மற்றும் மனைவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாஸ்ராபுரியில் இருந்து வந்த ரயில்

நாஸ்ராபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற பயணிகள் ரயில், வடமாதிமங்கலம் ரயில் நிலையத்தை கடக்கும் போது, தண்டவாளத்தில் நின்றிருந்த கணவன்-மனைவி மீது மோதியது. இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் யார்?

முதல் கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் திருவண்ணாமலை அருகே நல்லவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த சந்திரகுமார் - சிந்து தம்பதியினர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments