திருடுபோன அம்மன் தாலி.. திரும்பி வந்த விசித்திரம் | திருத்தணி அருகே பரபரப்பு


 

திருத்தணி அருகே உள்ள *அய்யனேரி திரௌபதி அம்மன் கோவிலில்* நடந்த சம்பவம் பக்தர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

*என்ன நடந்தது?*

கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த *10 சவரன் தங்கத் தாலி திருட்டு போய்விட்டதாக* புகார் வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் எதிர்பாராத திருப்பம் நடந்தது.

*பூசாரிக்கு வந்த அருள்*

கோவில் பூசாரி மகேஸ்வரிக்கு திடீரென அருள் வந்தது. அவர் கோவிலை சுற்றி ஓடியபின் நேராக கருவறைக்குள் சென்றார்.

சிறிது நேரத்தில் *கையில் தாலியுடன் திரும்பி வந்து* பக்தர்களிடம்,

> "என் நகை எங்கேயும் திருடு போகல.."

என்று கூறி ஆடினார்.

இதை பார்த பக்தர்கள் அனைவரும் *"கோவிந்தா.. கோவிந்தா"* என பரவசத்துடன் கோஷமிட்டனர்.

*அந்த தாலி*

படத்தில் இருப்பது போல பெரிய பெரிய பொட்டுக்கள் கொண்ட *10 சவரன் தங்க தாலி* அது. கருவறைக்கு உள்ளேயே இருந்ததாக பூசாரி கூறியுள்ளார்.

தற்போது இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Post a Comment

0 Comments