ஆரணி அருகே சீரடி சாயிபாபா கோவிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை – பக்தி சொற்பொழிவு மற்றும் அன்னதானம் ஏற்பாடு


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வெங்கடேசன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள சீரடி சாயிபாபா கோவிலில் இன்று சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பிரபல ஆன்மிகப் பேச்சாளர் திரு. கருணாநிதி அவர்கள் பக்தி சொற்பொழிவு ஆற்ற உள்ளார். இந்த சொற்பொழிவில் கலந்து கொண்டு சாயிபாபாவின் அருளைப் பெறுமாறு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுவதுடன், பக்தர்களுக்காக அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் நிர்வாகப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் வெங்கடேசன்பட்டி திரு.A.அருள் அவர்களை ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இந்த ஆன்மிக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

– Gopi All News

Post a Comment

0 Comments