தருமபுரியில் தலைக்கவச விழிப்புணர்வு: கொரில்லா, ஓணான் பொம்மைகள் மூலம் இனிப்பு வழங்கி வினோத பிரச்சாரம்


 

தருமபுரியில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கொரில்லா மற்றும் ஓணான் பொம்மை வேடமணிந்த தன்னார்வலர்கள், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை கட்டியணைத்து பாராட்டினர். மேலும், அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

தலைக்கவசம் அணிவதால் உயிர் பாதுகாக்கப்படுவதுடன், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். இந்த வினோதமான விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பலரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.

சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த முயற்சி, தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை மக்களிடம் எளிதில் கொண்டு சென்றதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments