திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வெங்கடேசன்பட்டி கிராமத்தில் ஆடி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி,அருள்மிகு செல்லியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதனை முன்னிட்டு ஊரணி பொங்கல் மற்றும் ஆடி மாத சிறப்பு பொங்கல் வைத்து பக்தி பரவசத்துடன் வழிபாடு நடைபெற்றது. கிராம மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கிராம நலன் மற்றும் மக்கள் வளமுடன் வாழ வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
0 Comments