தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் பெண் காவல் அதிகாரியிடம் செல்போனை மர்ம நபர் ஒருவர் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனை பறித்த நபரை பிடிக்க முயன்றபோது ஓடும் ரயிலில் இருந்து அந்த பெண் காவலர் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த பொதுமக்கள் செல்போனை பறித்த வடமாநில இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்தது. போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் வடமாநில இளைஞரை விடுவிக்க கோரி அவரது மனைவி தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
0 Comments