வெங்கடேசன் பட்டி கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம்


 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வெங்கடேசன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் வெங்கடேசன் பட்டி கிராமத்தின் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சிகளில் சாய்பாபாவின் , ஆன்மிகக் கதைகள், சொற்பொழிவுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்டவை இடம்பெற்றன.

மேலும், பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் பால் மற்றும் பிஸ்கட், மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இப்பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் சாய்பாபாவை வழிபட்டு ஆன்மிக மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments