ஆரணி அருகே அக்கராபாளையம் கிராமத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் போது ஏற்பட்ட மின்சார விபத்தில் 17 வயது இளைஞர் உயிரிழந்தார்.
அப்பகுதியை சேர்ந்த சந்தோஷ் (17) என்பவர் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை தொட்டபோது மின்சாரம் தாக்கியது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்தில் மின்சார உபகரணங்களை கையாளும் போது கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments