ஆரணி அருகே உள்ள மருதூர் கிராமத்தில் நேற்று இரவு 20.07.2026 பெய்த கனமழையின் போது மின்சாரம் பாய்ந்து 25 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிச்சாண்டி என்பவருக்கு சொந்தமான ஆட்டு மந்தையில் இந்த விபத்து நடந்துள்ளது. மழையின் போது மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்ததில் சுமார் 2.50 லட்சம் மதிப்பிலான 25 ஆடுகள் உடனடியாக உயிரிழந்தன.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த விவசாயி தனது ஆடுகள் அனைத்தும் இறந்து கிடந்ததை பார்து கண்ணீர் மல்கினார்.
0 Comments