ஆரணி டவுன் பாட்சா தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கில்லா ராஜகணபதி ஆலயத்தில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து உள்ளிருந்த ரொக்க பணத்தை திருடி சென்றுள்ளனர். திருடர்கள் உண்டியலில் 29 ரூபாயை மட்டும் வீசிவிட்டு சென்றது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்த ஆரணி நகர போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் உள்ள CCTV காட்சிகளை கொண்டு திருடர்களை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
பக்தர்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
0 Comments