முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தெரிந்து கொள்வோம்


 

ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு இஞ்சினிலும்

"WDM2", "WAP4" போன்று

ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்?

WDP 3A

#முதல்எழுத்து:

முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்

W - அகன்ற இருப்பு பாதை

(Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)

Y - மீட்டர் இருப்புப் பாதை

(Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)

Z - குறுகிய இருப்புப் பாதை

(Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)

N - குறுகிய இருப்புப் பாதை

(Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)


WDM 2

#இரண்டாம்எழுத்து:

இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.

D - டீசல் இஞ்சின்

A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)

C - மின்சக்தி - நேர் மின்னாட்டம்

(DC traction)

CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)

B - பேட்டரி சக்தி

இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.


YG

#மூன்றாம்_எழுத்து:

மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)

G - சரக்கு ரயில் (Goods)

P - பயணிகள் ரயில் (Passenger)

M- சரக்கு & பயணிகள் ரயில்

U - புறநகர் ரயில்

சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும்

மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும்.

அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது

( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து)


WAP 1

மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று இருந்தது அல்லவா?

அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.

இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது.


WDG 3A

நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை

(A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள்.

இரண்டையும் சேர்த்தால் கிடைப்பதுதான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).

எடுத்துக்காட்டாக,

WDM 3E

இஞ்சினின் சக்தி = 3×1000+ 5×100 = 3500 HP ஆகும்.

அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால்

அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும்.

பெரும்பாலும் சரக்கு ரயில்களில்தான் அவை இருக்கும்.

WAG 5

சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால்,

மேற்கண்ட குறியீடே வரும்.

அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆரணியில் அதிர்ச்சி: 500 கிலோ கெட்டுப்போன அசைவ உணவு பறிமுதல்

  ஆரணி:  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காஜிவாடை பகுதியில் இயங்கி வந்த அசைவ உணவு விற்பனை கடையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ கெட்டுப்போன ஆட்டுக்கறி, மீன் ஆகியவற்றை நகராட்சி அதிகாரிகள் இன்று 01.07.2026 அதிரடியாக பறிமுதல் செய்தனர். நடந்தது என்ன? நகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பொன்னு பிரதாப் ஆகியோர் அடங்கிய குழு திடீர் ஆய்வு மேற்கொண்டது. அப்போது கடையில் ஆட்டுத்தலை, கால், மீன் உள்ளிட்டவற்றை குளிரூட்டும் பெட்டியில் முறையாக பராமரிக்காமல், அழுகிய நிலையில் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் விவரம்: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிலோ மதிப்பிலான கெட்டுப்போன அசைவ கறியை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். சம்பந்தப்பட்ட கடைக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை: மழைக்காலத்தில் அசைவ உணவுகள் விரைவில் கெட்டுப்போகும். எனவே பொதுமக்கள் ஓட்டல், கடைகளில் இறைச்சி வாங்கும்போது அதன் தரத்தை நன்கு பரிசோதித்து வாங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தவெக கட்சி சார்பில் சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய கம்பம் அமைப்பு - பொதுமக்கள் நன்றி

  திருவண்ணாமலை மாவட்டத்தில் தவெக கட்சியினர் ஆரணியில் சேதமடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் குறித்து வெளியான செய்திக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆரணியில் சேதமடைந்திருந்த பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மின் விபத்து அச்சத்தில் இருந்து  ஊர் பொதுமக்கள் விடுபட்டுள்ளனர். மேலும் இந்த பணிகள் விரைவாக நடைபெற உதவியாக இருந்த  தமிழக வெற்றிக் கழக கட்சியினர் திருவண்ணாமலை  வடக்கு மாவட்ட   ஆரணி தென்கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு JSV சுதன் M.Com அவர்கள்  மற்றும்  தென் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் திரு AS.தண்டபாணி press பையூர்  அவர்களும் மற்றும்  மின்வாரிய துறை அதிகாரி அவர்களுக்கும் பொது மக்கள் சார்பில் மிகவும் பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி மலை மேல்சிசமங்கலத்தில் தவெக கட்சியினர் தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

  திருவண்ணாமலை:  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம், கேக் வெட்டி கொண்டாட்டம் திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், மேல்சிசமங்கலம் கிளை சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர்.தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கி, கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடினர். தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் திரு.கே.வெங்கடேஷ் குமார் மற்றும் ஒன்றிய இணைச் செயலாளர் திரு.எம்.மதிமாறன் ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.  இந் நிகழ்ச்சியில் தவெக கழக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் திரு எழில், ராஜசேகர், கேசவேல், ஏழுமலை, பிரகாஷ், தமிழ்வாணன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு முன்னிலை வகித்து நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொண்டு அன்னதானத்தில் பங்கேற்று, இனிப்புகளை பெற்றுச் சென்றனர். தமிழக வெற்றிக் கழகத்தினரின் இந்த சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.